சாலை மறியல் செய்த 247 ஆசிரியர்கள் கைது
விழுப்புரம் : விழுப்புரத்தில் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 247 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம், நகராட்சி திடலில், தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயாநந்தன் தலைமை தாங்கினார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிர்யர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து, காலை 11:15 மணிக்கு திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த தாலுகா போலீசார், 122 பெண்கள் உட்பட 247 ஆசிரியர்களை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.