உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் 250 போக்சோ வழக்கு பதிவு 34 கொலை வழக்குகளில் 62 பேர் கைது

மாவட்டத்தில் 250 போக்சோ வழக்கு பதிவு 34 கொலை வழக்குகளில் 62 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 392 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 4 கொள்ளை வழக்குகளும், 28 வழிப்பறி வழக்குகளும், 360 திருட்டு ஆகிய குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதில், 255 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருடிய ரூ. 1 கோடியே 50 லட்சத்து 40 ஆயிரத்து 250 மதிப்பிலான பொருட்கள் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல், மாவட்டத்தில் 34 கொலை வழக்குகளில், 62 குற்றவாளிகள் செய்யப்பட்டுள்ளனர்.இதில், 17 கொலை குற்ற வழக்குகளில் 38 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 5,494 நபர்கள் மீதும், மொபைல் பேசி கொண்டு வாகனம் ஓட்டிய 13,405 நபர்கள் மீதும், சரக்கு வாகனங்களில் அதிகமான நபர்களை ஏற்றி சென்றதாக 163 நபர்கள் மீதும் உட்பட மொத்தம் 3,34,436 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தாண்டு நடந்த 537 சாலை விபத்து வழக்குகளில் 554 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.இந்த மாவட்டத்தில், தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல் ஆகிய குற்ற செயலில் ஈடுபட்ட 15 சாராய வியாபாரிகள், 10 கஞ்சா குற்றவாளிகள், 2 சைபர் குற்றவாளிகள் உட்பட 62 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.மதுபானம் கடத்தல், விற்பனை செய்பவர்கள் உள்பட 10,688 வழக்குகள் பதிவு செய்து, 10,486 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 6,151 லிட்டர் சாராயம், 6,254 லிட்டர் கள், 1,205 லிட்டர் ஊரல், 1,59,211 மதுபாட்டில்கள், 239 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன 649 நபர்கள் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த தலைமறைவு குற்றவாளிகள் 1,658 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 250 போக்சோ குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். இந்தாண்டு, போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை