காரில் மது பாட்டில் கடத்திய 3 பேர் கைது
வானுார், : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் கீழ்புத்துப்பட்டு சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 251 மது பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவெட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், 36; செல்வபாண்டியன், 32; லோகநாதன், 30; என்பதும், உறவினரின் திருமண நிகழ்ச்சி விருந்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்ததுஉடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.