உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 

மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி வயலில் மேய்ந்த 3 ஆடுகள் இறந்தன. விவசாயி படுகாயம் அடைந்தார்.விக்கிரவாண்டி அடுத்த கல்யாணம் பூண்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; விவசாயி. நேற்று, இவர் முட்டத்துார் பகுதியில் அவரது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.மதியம் 1:30 மணியளவில் திடீரென மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது தாக்கிய மின்னலில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் இறந்தன. ஏழுமலை படுகாயமடைந்தார்.உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.கஞ்சனுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ