உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் படுகாயம்

ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான், 30; மனைவி ரேவதி, 27; இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான், நேற்று முன்தினம் மாலை, ஆவணிப்பூரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் மனைவி மகளுடன் சென்றார்.சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த காரின் மீது மற்றொரு கார் மோதியது. இதில் ஆட்டோ பின்னால் வந்த கார் மோதியது. இதில், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற மூங்கிலான் மற்றும் மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ