மேலும் செய்திகள்
தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து
09-Oct-2024
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வயல்வெளியில் 5 மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த நவமால்காப்பேர் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இரை தேடுவது வழக்கம். இந்நிலையில் பெரியாளங்குளம், குளக்கரையில் நேற்று 5 மயில்கள் இறந்து கிடந்தன.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார், வனக்காப்பாளர் ராமநாதன், ராஜசேகர் ஆகியோர் இறந்து கிடந்த மயில்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.தொடர்ந்து பள்ளித்தென்னல் கால்நடை மருத்துவர் மகேந்திரன், ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இறந்த மயில்களை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதனையடுத்து 5 மயில்களும் குளக்கரையில் புதைக்கப்பட்டது.
09-Oct-2024