உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையை சேர்ந்தவர் குமரவேல், 47; தனது பிள்ளைகள் படிப்பிற்காக விழுப்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சாலையில் உள்ள வீட்டை வாரம் ஒரு முறை வந்து பார்த்து செல்வது வழக்கம். கடந்த 11ம் தேதி வீட்டை பார்த்து சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.குமரவேல் வீட்டிற்கு வந்து பார்த்து போது கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை