உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம்

90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் மேற்கு குளக்கரையில் எழுந்தருளியுள்ள ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்ச தீப திருவிழாவில், தமிழ் புத்தாண்டையொட்டி 19ம் ஆண்டு பாலாபிஷேகம் நேற்று நடந்தது.காலை 10.00 மணிக்கு அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள், அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாலாபிஷேகம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, 90 அடி உயர சிலைக்கு மோட்டார் பைப் மூலம் 5,000 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சிலை நிறுவனர் தனுசு தலைமையிலான குழுவினர், பாலபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி