உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 512 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா: அமைச்சர் வழங்கல்

512 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா: அமைச்சர் வழங்கல்

அவலுார்பேட்டை : வளத்தியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம், ஒன்றிய சேர்மன் கண்மணி முன்னிலை வகித்தனர்.அமைச்சர் மஸ்தான் மேல்மலையனுார் தாலுகாவுக்குட்பட்ட பழங்குடியினர், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட 512 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடி ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி பேசினார்.விழாவில், தாசில்தார் முகமது அலி, ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் விஜயலட்சமி, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை