உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது

விழுப்புரம்: அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு போலீசார், மாம்பழப்பட்டு ரோடு, நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடலுார் மாவட்டம், செல்லங்குப்பம் விஜய், 26; விழுப்புரம் சித்தேரிக்கரை துரை, 43; தக்கா தெரு அந்தோணிசாமி, 40; ஜி.ஆர்.பி., தெரு பார்த்திபன், 25; ஆகியோர் தங்கள் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டியது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விஜய் உட்பட 4 பேரையும் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, அதிவேகமாக வாகனம் ஓட்டிய அசோகபுரி ரவிக்குமார், 32; என்பவரை விழுப்புரம் டவுன் போலீசாரும், சித்தாத்துார் திருக்கையை சேர்ந்த சரவணவேல், 49; என்பவரை விழுப்புரம் தாலுகா போலீசாரும் கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ