தேனீக்கள் கொட்டியதில் காணையில் 6 பேர் காயம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில், 6 பேர் காயமடைந்தனர்.விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலை, காணை தனியார் ஐ.டி.ஐ., அருகில் ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வபோது தேனீக்கள் கொட்டி காயமடைந்து வந்தனர்.நேற்று காணை வழியாக பைக்கில் சென்ற மற்றும் அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த பொதுமக்களை தேனீக்கள் கொட்டியது. இதில், கோழிப்பட்டு பழனி, 57; காணை சங்கர், 47; லோகநாதன், 40; உட்பட 6 பேர் காயமடைந்தனர். காணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்கள் கூட்டை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.