உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பண்ணையில் தீ விபத்து; 200 கோழிகள் கருகின

பண்ணையில் தீ விபத்து; 200 கோழிகள் கருகின

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோழிப் பண்ணை தீப்பிடித்து எரிந்ததில் 200 கோழிகள் கருகின.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.நேற்றிரவு 7:30 மணியளவில், பண்ணை கொட்டகையின் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 200 கோழிகள் கருகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை