உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆற்றில் மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

ஆற்றில் மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

விழுப்புரம் : தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் கிருஷ்ணன், 56, கூலி தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு, அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் பகுதி தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் மூழ்கி இறந்தார்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சென்று, உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை