மேலும் செய்திகள்
விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது
01-Nov-2024
வானுார்; வானுார் அடுத்த பூத்துறை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தேசிங்கு மகன் அங்காளன். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 1;15 மணிக்கு, அவரது வீட்டிற்குள் நான்கு அடி உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.அப்போது, கண் விழித்து பார்த்த அங்காளன் வீட்டிற்குள் தூங்கியவர்களை எழுப்பி, வெளியேற்றினார். பின் வானுார் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
01-Nov-2024