உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையோரம் மண்ணில் சிக்கிய அரசு விரைவு பஸ்

சாலையோரம் மண்ணில் சிக்கிய அரசு விரைவு பஸ்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே அரசு விரைவு பஸ் சாலையோர பள்ளத்தில் சிக்கியது. பயணிகள் காயமின்றி தப்பினர்.சென்னையிலிருந்து அரசு விரைவு பஸ், நேற்று காலை புதுச்சேரி நோக்கிச் சென்றது. பஸ்சை பெண்ணாடத்தைச் சேர்ந்த சக்திவேல், 40; ஓட்டி வந்தார்.காலை 7:30 மணியளவில் திண்டிவனம் - சென்னை சாலையில் உதயம் நகர் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை ஓவர் டேக் செய்த போது, விரைவு பஸ் சாலையோரத்திலுள்ள மண் குவியலில் சிக்கியது. இதில் பஸ் சக்கரம் மண்ணுக்குள் புதைந்ததால் பஸ்சை இயக்க முடிய வில்லை. அதிர்ஷ்டவச மாக டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினர்.திண்டிவனம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்