மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
01-Oct-2024
செஞ்சி: செஞ்சியில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நவநீதகண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை செஞ்சி கோட்டை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர், விற்பனைக்காக 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், 47; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
01-Oct-2024