உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு வானுார் அருகே துணிகரம்

வானுார் : நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த ராயப்பேட்டை ஆசாத் வீதியை சேர்ந்தவர் ஜியாவுல்லக். இவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், கடந்த 23ம் தேதி, வீட்டின் ஒரு அறையில் துாங்கினர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த ஜியாவுல்லக் மற்றொரு அறைக்குள் சென்றுபார்த்தபோது, பீரோவை உடைத்து 5 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, 2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்தபோது, பொதுமக்கள் கூச்சலிட்டதால் தப்பிச் சென்றது தெரியவந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் ஜாப்பர் என்பவரது வீட்டில் பணம், நகை திருடு போனது. தற்போது மீண்டும் ஜியாவுல்லக் வீட்டில் நகைகள், பணம் திருடப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜியாவுல்லக் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை