காய்ச்சலால் பாதித்த வாலிபர் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் காய்ச்சலால் பாதித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஆனந்தராஜ், 24; நிதி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த இவர், நேற்று அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.