உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை தேவை! நெடுஞ்சாலைகளில் சாகச பயணத்தால் மக்கள் அச்சம்

விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை தேவை! நெடுஞ்சாலைகளில் சாகச பயணத்தால் மக்கள் அச்சம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுச் செல்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் நகரில் உள்ள நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றார்ேபால் போக்குவரத்துக்கு அரசு வகுத்துள்ள விதிமீறல் செயல்களும் எல்லை மீறியுள்ளதால் விபத்து மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.விழுப்புரத்தில், சென்னை, திருச்சி, புதுச்சேரி நெடுஞ்சாலைகளில் இரு சக்கரம், நான்கு சக்கரம் உட்பட சரக்கு, கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் சாலை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கிறதா என்பதை கண்காணிக்கும் பணிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகளும், போலீசாரும் மாதத்தில் முதலில் சில நாட்களும், இறுதியில் சில நாட்களும் அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக சில வழக்குகளை மட்டும் போட்டு, அபராதம் வசூலிக்கின்றனர்.அதிகாரிகளின் அலட்சிய போக்கால், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமுறை மீறுவோரின் செயல்கள் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், போக்குவரத்து பிசியான நேரங்களில் சிலர் சாகச பயணங்களை செய்து, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.இருசக்கர வாகனங்கள் மீது கால் வைத்து கொண்டு ஓட்டுதல், மூன்று அல்லது நான்கு பேராக செல்வது மற்றும் ரேஸ் போன்ற அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் செயல்களில் ஈடுபடுவதால், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதியை மதித்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்கின்றனர்.விதிமீறல் செயல்களால், விழுப்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.இதனால், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்லக் கூட அச்சமடைந்துள்ளனர். அதே போல், தனியார் மற்றும் அரசு பஸ்கள் நேரத்தில் பஸ் நிலையத்திற்குச் சென்று, பயணிகளின் ஏற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு, கடலுார், புதுச்சேரி மார்க்கத்தில் பஸ்களை இயக்கிச் செல்கின்றனர்.இவர்கள், கூடுதல் சத்தம் எழுப்பும் விதிமுறை மீறி ஏர் ஹாரன்களை வைத்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சுறுத்திச் செல்கின்றனர்.இதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், டிராபிக் போலீசார் மெத்தனமாக செயல்படுவதால், மக்கள் அச்சத்தோடு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலை மேலும் தொடராமல் இருக்கவும், விபத்தில் இருந்து மக்களைக் காக்கவும், அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ