மேலும் செய்திகள்
கோடை உழவு பணி துவக்க விழா
27-May-2025
மரக்காணம்: மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.முகாமிற்கு, மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன், துணைச் சேர்மன் பழனி முன்னிலை வாகித்தனர். ஊராட்சி தலைவர் மல்லிகா வரவேற்றார்.வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் உயரிய பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார். முகாமில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் குருமூர்த்தி, கால்நடை மருத்துவர் தமிழ்மணி, தோட்டக்கலைத் துறை அலுவலர் ரூபியா, வனத்துறை அலுவலர் மணிராவ், பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் கவுரி, விதைச் சான்று அலுவலர் மணிகண்டன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர் கருப்பையா, ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் சொட்டு நீர் தெளிப்பு குறித்தும், ட்ரோன் கருவி பயன்படுத்தி மருந்து தெளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
27-May-2025