மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
16-Feb-2025
திண்டிவனம்; அ.தி.மு.க.,சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டார்.திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில் 5வது வார்டு அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வார்டு செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் திருவேங்கடம், சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன்,பூத்கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் பங்கேற்று, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன உத்தரவை வழங்கினர். இதில் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை, ரவி, நகர இளைஞரணி உதயகுமார், நகர மகளிர் அணி செயலாளர் ஜெயஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், முன்னாள் கவுன்சிலர் திருப்பதியார்சங்கர், வழக்கறிஞர்கள் மேனன், குலசேகரன், ஐ.டி.பிரிவு காமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
16-Feb-2025