மேலும் செய்திகள்
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்
1 hour(s) ago
பெண் தீக்குளிக்க முயற்சி
1 hour(s) ago
விழுப்புரம் மாவட்டத்தில் பா.ஜ.,விற்கு 2 சீட்?
1 hour(s) ago
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக 25 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்த 23ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டிவனத்திற்கு புதிய பஸ் நிலையம் கொண்டு வருவதற்கு பிரதான கட்சிகள் எந்த முயிற்சியும் எடுக்காத நிலையில், தற்போது புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு போட்டி போடுகின்றன. புதிய பஸ் நிலையத்திற்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்' என பெயர் எழுதப்பட்டு விட்ட நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் பெயர் வைப்பதில் மல்லுக்கு நிற்கின்றனர். காங்., கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை, புதிய பஸ் நிலையத்திற்கு, இந்திரா பெயரை வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். காங்., வைத்த கோரிக்கை க்கு ஆதரவு தெரிவிப்பது போல், அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனனும், புதிய பஸ் நிலையத்திற்கு இந்திர பெயரை வைக்க வேண்டும் என்று நகராட்சி கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். பு திய பஸ் நிலையத்திற்கு பெயர் வைத்த பிறகு, இந்திரா பெயரை வைக்க வேண்டும் என காங்., அ.தி.மு.க., கட்சிகள் மல்லுகட்டி வருகின்றன.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago