உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழவராயனுார் கிராமத்தில் அ.தி.மு.க., நிவாரண உதவி

மழவராயனுார் கிராமத்தில் அ.தி.மு.க., நிவாரண உதவி

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியம், மழவராயனுார் கிராமத்தில், வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் பசுபதி, முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் சண்முகம் மழையால் பாதிக்கப்பட்ட 120 குடும்பத்தினருக்கு பாய், தலையணை, போர்வை, வேட்டி, சேலை, அரிசி, காய்கறிகள், பிரட் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், இளைஞரணி ரமேஷ், முருகன், பேரவை ரவிச்சந்திரன், மாணவரணி பாக்கியராஜ், ராஜசேகரன், பாசறை முரளி ராஜா, அண்ணா தொழிற் சங்கம் ராமதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன், கிளை நிர்வாகிகள் அய்யனார், ராஜா, மோகன், சக்திவேல், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை