அ.தி.மு.க., செயலாளர் இல்ல திருமணம்
விழுப்புரம்: கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ்பாபு இல்ல திருமண விழா நடந்தது.விழுப்புரம் ஆனந்தா மஹாலில் , சுரேஷ்பாபு சகோதரர் கந்தன்- சாந்தி மகள் டாக்டர் வினோதினி - டாக்டர் பாலாஜி திருமணம் நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர்கள் மோகன், செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன், சக்கரபாணி, அர்ஜூணன், அன்னியூர் சிவா, செந்தில்குமார், சிவக்குமார், சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முகையூர் சம்பத், அழகுவேலு பாபு, ராமமூர்த்தி, புஷ்பராஜ், வெங்கடேசன், முருகுமாறன், சிவசுப்ரமணியன், சத்யா பன்னீர்செல்வம், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.நிகழ்ச்சியில், ஆடிட்டர்கள் குலோத்துங்கன், பிரசாத், ஆவின் பொதுமேலாளர் ராஜேஷ், கல்வி குழும நிர்வாகிகள் மணக்குள விநாயகர் தனசேகரன், சரஸ்வதி பள்ளி ராஜசேகர், வி.ஆர்.பி., பள்ளி சோழன், குமார்'ஸ் கோத குமார், பழனிவேலு ஐ.டி.ஐ., ராஜேந்திரன், ஜெயந்திர சரஸ்வதி பள்ளி பிரகாஷ், ராஜேஷ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், மாவட்ட மாணவரணி சக்திவேல், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். டாக்டர் கைலாஷ், சுஷாந்த் சுகில் நன்றி கூறினர்.