மேலும் செய்திகள்
பழனிசாமிக்கு கட்சியினர் வரவேற்பு
08-Sep-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. ஆர்.சி., மேலக்கொந்தையில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை பேச்சாளர் சம்சுகனி கலந்து கொண்டு ஆளும் கட்சியை கண்டித்து பிரச்சாரம் செய்து பேசினார். ஒன்றிய தலைவர் பழனி, மகளிர் அணி பழனியம்மாள், அணி நிர்வாகிகள் கிருஷ்ணன், மணி, பெரியான், திருநாவுக்கரசு, அண்ணாமலை, கிளை செயலாளர்கள் ராஜூ, மணி,ஜெயக்குமார்,வெங்கடேசன், குமார், மாரிமுத்து,அந்தோணிராஜ்,பெலிக்ஸ்லாரன்ஸ்,கமூரூதீன், தகவல் தொழில் நுட்ப அணி அந்துவான் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Sep-2025