உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

விழுப்புரம் : கோலியனுார் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து திருவாமாத்துாரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அப்துல் ரகீம், கிளை செயலாளர்கள் குருநாதன், பிரகாஷ், பழனியப்பன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., மற்றும் மாநில மகளிரணி துணை செயலாளர் அமுதா சிறப்புரையாற்றினர். அப்போது, கிளை செயலாளர்கள், நாகராஜ், மணிவேல், பாலமுருகன், பாலு, பாலசந்தர், பாண்டு, சுதாகர், தர்மலிங்கம், அருள், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, மாவட்ட ஜெ., பேரவை துணை தலைவர் மனோகரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் குமரேசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை