மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா...
16-Sep-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தும்பூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் முருகன், நிர்வாகிகள் வடிவேல், ராஜா, செல்வராஜ், தாமரைக் கண்ணன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஆளும் கட்சியை கண்டித்து பேசினர். மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் லட்சுமி நாராயணன், பேரவை செயலாளர் சரவணகுமார், நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் குமார், பழனியம்மாள், ஒன்றிய தலைவர் பழனி, அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025