உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கண்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பாஸ்கர் வரவேற்றார். தலைமை பேச்சாளர் அமுதா சிறப்புரையாற்றினார். ஜெ., பேரவை மாவட்ட துணைத் தலைவர் சரவணன், துணைச்செயலாளர் மணிமாறன், நகர துணைச் செயலாளர்கள் அஜிஸ், அமுதா, நகர பேரவை செயலாளர் திருமலை, இளைஞரணி வேலு, மாவட்ட பிரதிநிதிகள் குமரன், நாகராஜ், அண்ணா தொழிற்சங்கம் ஜஹாங்கீர், வர்த்தகர் அணி பாலா, நிர்வாகிகள் ஜெயராமன், கமலக்கண்ணன், ரமேஷ், செந்தில், ராஜா, ராஜாராம், நாராயணன் , பாஷா, சிலம்பு ஆகியோர் பங்கேற்றனர். வார்டு செயலாளர் சுந்தர் நன்றி கூறினார். �   செஞ்சியில் அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை