மேலும் செய்திகள்
கோலியனுார் ஒன்றிய தே.மு.தி.க., நலத்திட்ட உதவி
27-Aug-2025
விழுப்புரம்: கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், மழவராயனுார் ஊராட்சி சுந்தரிப்பாளையம் கிராமத்தில் தி.மு.க., அரசை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் விஜயா சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். தலைமை பேச்சாளர் சம்சுகனி சிறப்புரையாற்றினார். இதில் கிளை பிரதிநிதிகள் சக்திகுமார், தண்டபாணி, ஆனந்த், பேரவை செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞரணி செயலாளர் பொறியாளர் ரமேஷ், கிளை செயலாளர்கள் நடராஜன், அருள் பிரகாஷ், அய்யனார், நிர்வாகிகள் பழனிவேலு, அய்யன்(எ)பெருமாள், முனுசாமி, கலியவரதன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் செய்தனர். கிளை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
27-Aug-2025