மேலும் செய்திகள்
மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சோதனை
05-Aug-2025
வானுார்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையில் போலீசார் இ.சி.ஆரில் கீழ்புத்துப்பட்டு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்திச ்சென்றது தெரிய வந்தது. விசாரணையில், மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 40; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி சென்று, கூடுதல் விலைக்கு விற்று வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து, 200 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
05-Aug-2025