மேலும் செய்திகள்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு
27-Nov-2024
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் அனைத்து வணிகர் சங்க ஆண்டு விழா நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவகுமார் வரவேற்றார்.விழாவில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஜனனி மகாலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் உலகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கடைவீதி முக்கிய பகுதிகளில் வேகத்தடை அமைப்பது, பெஞ்சல் புயலால் பாதிப்படைந்த சிறு வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், சட்ட ஆலோசகர்கள், சங்க ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Nov-2024