உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மயிலம் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 மயிலம் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் 'அலுமினி மீட் 25' முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்விக்குழுமம் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முரளிகிருஷ்ணன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் சண்முகவடிவேல் சிறப்புரையாற்றினார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் பலர் தங்களின் கல்லுாரி காலத்தின் நினைவுகளையும், தற்போது பணிபுரியும் இடத்தின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண் டனர். இவர்கள், தற்போது இந்த கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தமான உதவிகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி