முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த, 1996 ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 29 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவ, மாணவியர் நேரில் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் சிவமூர்த்தி, ஞானசேகரன், இந்திரா ,ஞானமணி, தற்போது பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியர் வெண்ணிலா, ஆசிரியர்கள் ஆறுமுகம், பழனிவேல் ,சுந்தரமூர்த்தி, முத்துகிருஷ்ணன், சந்திரமோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.