விஜய் முதல்வராவது உறுதி ஆனந்த் நம்பிக்கை
செஞ்சி : 2026 சட்டசபை தேர்த லில் விஜய் முதல்வராவது உறுதி என, த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் பேசினார். செஞ்சியில் த.வெ.க., கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குண சரவணன் தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக விஜய் இருக்கிறார். கண்டிப்பாக 2026ல் முதல்வராக அமர்வார். ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும் சந்திக்கும் மக்கள் எங்கள் குடும்ப ஓட்டு விஜய்க்கு தான் என கூறுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி த.வெ.க., மட்டும் தான். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பல ஆண்டுகளாக இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன வித்தியாசமாக சொல்லப் போகிறீர்கள் என நினைக்கலாம். ஆனால் விஜய் ஒரு வார்த்தை சொன்னால் அதை கடைபிடிப்பவர். எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினாலும் அதிகமாக இருப்பது தாய்மார்கள். அவர்களுக்கு த.வெ.க., எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு ஆனந்த் பேசினார்.