மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் அன்புமணி நடைபயணம்
15-Aug-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு, கட்சியினர் வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் சட்டசபை தொகுதி சார்பில், 'உரிமை மீட்க; தலைமுறை காக்க' நடைபயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறார். திண்டிவனம் வந்த அன்புமணியின் நடைபயணம் வண்டிமேடு திடலில் முடிந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். கூட்டத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில கொள்கை அணி விளக்க செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி வரவேற்றார். மாநில துணை தலைவர் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், மாவட்ட தலைவர் சேது, சிறுபான்மை பிரிவு பிச்சை முகமது, சஞ்சிப்பா முன்னிலை வகித்தனர் . பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், கிழக்கு மண்டல செயலாளர் வைத்தி, முன்னாள் எம்.பி., தன்ராஜ், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ், தேர்தல் பணிக்குழு மாநில தலைவர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பூதேரிரவி, இளைஞர் அணி ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், பிரசாந்த், ஆறுமுகம், சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Aug-2025