அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டமைப்பு சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்:விழுப்புரத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு பேரவை மண்டல செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தலைவர் சீனிவாசன், நிர்வாக பணியாளர் சங்க செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் துளசிதாசன், பாட்டாளி தொழிற்சங்க ஞானதாஸ், தே.மு.தி.க., தொழிற்சங்க மண்டல செயலாளர் ரமேஷ், பி.எம்.எஸ்., சங்க மண்டல தலைவர் இளவரசன், செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.நிர்வாகிகள் நக்கீரன், திருநாவுக்கரசு, ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல பொருளாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.