மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழா
29-Mar-2025
மயிலம்: மயிலம் அருகே உள்ள ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி சேர்மன் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன்முன்னிலை வகித்தார். விழுப்புரம் கூடுதல் எஸ்.பி., தினகரன், அரசு வழக்கறிஞர் ஆதித்யன், திண்டிவனம் பார் கவுன்சில் தலைவர் ராஜாராமன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Mar-2025