உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம் ; விழுப்புரத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தியல் துறை, இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை எஸ்.பி., தீபக்சிவாச் தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை நிபுணர் நிஷாந்த், விழுப்புரம் அரசு கல்லுாரி மருத்துவர் புகழேந்தி, கோலியனுார் வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி முன்னிலை வகித்தனர்.இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி,தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மாணவ, மாணவியர்கள், சுகாதாரத் துறையினர், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். ஊர்வலம் திருச்சி சாலை வழியாக தெய்வானை அம்மாள் கல்லுாரி வரை சென்று முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ