உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிருக்கு மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் விண்ணப்பம் வரவேற்பு

மகளிருக்கு மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரங்கள் பெற மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.2025-26ம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர், தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வயது 25க்கு மேல் உள்ளவர்கள், பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் ஜூலை 14ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை