தங்கம் தரம் அறியும் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கம் தரம் அறியும் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு:விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் உடனடி வேலை வாய்ப்பிற்காக தங்கத்தின் தரம் அறிய பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்கத்தை பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகையை தரம் பார்த்து கொள்முதல், உரை - கல்லில் தரம் அறிதல், தங்கத்தில் தற்போதைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கே.டி.எம்., மற்றும் ஹால்மார்க் பற்றிய விளக்கம் தொடர்பான பயிற்சியோடு, அதற்கான உபகரணங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த பயிற்சி சனி, ஞாயிற்று கிழமைகளில் 17 நாட்கள் நுாறு மணி நேரம் நடக்கிறது. இதில், 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சி நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 13ம் தேதி வரை கட்டணம் செலுத்தி பயிற்சி நிலையத்தில் பெறலாம். இந்த பயிற்சி வரும் 15ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கி நடத்தப்பட உள்ளது.பயிற்சி பெற 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 15 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இது பற்றி மேலும் விபரம் பெற, விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை நேரடியாகவும், தொலைபேசி 04146 259467, மொபைல் 9442563330 எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.