மேலும் செய்திகள்
திருவள்ளூரில் வரும் 21ல் வேலை வாய்ப்பு முகாம்
16-Feb-2025
வானுார்: ஆரோவில்லில் ஒரு வாரத்திற்கு 'ஆரோவில் திருவிழா' கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் வரும் 21ம் தேதி அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. விழாவை கொண்டாடும் வகையில் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆரோவில் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து ஆரோவில் விழா குழுவினர் கூறுகையில், 'தினமும் தியானம், யோகா, கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், தமிழ் இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.இதில், அனைவரும் பங்கேற்கலாம். உலகம் முழுதுமிருந்து பல்வேறு அறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதனால், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்' என்றனர்.
16-Feb-2025