உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கண்டாச்சிபுரம் : அதனுார் ஊராட்சியில் கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு கரும்பு அபிவிருத்தி துறைத் தலைவர் ஜெயராம் தலைமை தாங்கினார். கரும்பு விரிவாக்கத்துறை தலைவர் ராஜப்பா முன்னிலை வகித்தார். சூரப்பட்டு கோட்ட அலுவலர் ரெஜிலிங்கப்பா வரவேற்றார்.முகாமில், கரும்பு நடவு செய்யும் முறை நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து ஜெயராம் விளக்கினர்.சூரப்பட்டு, அதனுார் பகுதி கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். கரும்பு விரிவாக்க அலுவலர் ஜெயபால் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை சூரப்பட்டு பகுதி கரும்பு அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், விஷ்ணு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி