உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வானுார் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நாடகம்

 வானுார் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நாடகம்

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடந்தது. போதை ஒழிப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில், இதன் ஒருங்கிணைப்பாளர் காந்தி மதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் மன மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்கள் குறித்தும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர்களாக ஒலி கலை மற்றும் கல்வி அமைப்பின் தலைவர் வினோத் அமர்நாதன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு நாடகத்தின் மூலமாகவும், சிறுகதைகள் மூலமும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடகக்குழுவில் உவாதி ராயப்பன், பிரவின்ராஜ், சந்துரு, சிவா அரிகரன், விக்னேஷ், அனுஷ்கா, தேவநாத், கவின்புகழ் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ