சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மஷினி தலைமை தாங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், பிங்க் அக்டோபர் மாதத்தின் முக்கியத்துவம், மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள், அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் (ஹெல்த் மிக்ஸ், முந்திரி, பிஸ்தா, பாதாம், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், வால்நட்) அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. புரத சத்து நிறைந்த உணவுடன் கூடிய மதிய உணவும் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ஏழுமலை, டாக்டர்கள் கீர்த்தனா, விக்னேஷ், வர்ஷா, செவிலியர் கண்காணிப்பாளர் ஷியாமளா, பாண்டிச்சேரி மஞ்சள் ரிப்பன் சங்கத்தினர், மருத்துவ பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.