பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
கண்டமங்கலம்: நவமால்காப்பேர் அண்ணா நகர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கண்டமங்கலம் ஒன்றியம் நவமாள்காப்பேர் ஊராட்சி, அண்ணா நகர் பாலமுருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. மாலை யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து கடலம் புறப்பாடாகி காலை 10;30 மணிக்கு கோபுர கலசத்திற்கும், 10.;45 மணிக்கு மூலவர் பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஊராட்சி தலைவர் மணிமேகலை சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வெங்கடேசன், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.