டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல பாலசுப்ரமணியன் அறிவிப்பு
விழுப்புரம்: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு ஏற்கத்தக்கது அல்ல என, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி இருந்தால் பணி நிரந்தரம், காலமுறை ஊதியமும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம்.ஆனால், 2000 ரூபாய் சம்பள உயர்வு என்பது ஏற்கத்தக்கது அல்ல, நியாயமானதும் அல்ல.எனவே, தமிழக முதல்வர் நடப்பு சட்டசபை கூட்டத் தொடர்களிலேயே டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.