உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு

செஞ்சி சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு

செஞ்சி : செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், மூலவர் சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.இது குறித்து கோவில் நிர்வாகி இந்திரா அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை