திண்டிவனம் பஸ் நிலைய பாதையில் டிராபிக் ஜாம் ஏற்படுத்தும் பைக்குகள்
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து பைக்குகள் நிறுத்தி வைப்பதால், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடிவதில்லை.திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதி காமராஜர் சிலை எதிரே உள்ள குறுகிய சாலை வழியாக, இந்திராகாந்தி பஸ் நிலையத்திற்கு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் வந்து செல்கிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பாதையில் ஒரு பகுதியில் வரிசையாக பைக்குகளை நிறுத்தி வைப்பதால், பஸ் நிலையத்திற்குள் பஸ் ஆட்டோக்கள் செல்ல முடிவதில்லை.இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. போக்குவரத்து போலீசார் பைக்குகள் சாலையில் சரியான இடத்தில் நிறுத்தும் வகையில் கயிறு பதித்தனர்.ஆனால் இந்த கயிறு புகைக்கப்பட்ட இடத்தையும் தாண்டி பைக்குகள் நிறுத்துவதால், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடிவதில்லை. பஸ் நடத்துனர் கிழே இறங்கி, ரோட்டில் நிறுத்தி வைத்துள்ள பைக்குகளை ஓரமாக நகர்த்தி விட்டு பஸ் எடுத்தும் செல்லும் நிலைமை உள்ளது.பிரச்னைக்குறிய இடத்தை போலீசார் நேரில் ஆய்வு செய்து, விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.