உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

செஞ்சி : அனந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அனந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் பிறந்த தின விழா நடந்தது.ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் நடந்த விழாவிற்கு, முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியாருடைய விடுதலைப் போராட்ட தியாகங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் முனியன், கிருபா, மணிகண்டன், செந்தில்குமார், கங்கா, சனேத் மேரி, ராமச்சந்திரன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை