உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., ஓட்டுச் சாவடி முகவர்கள் ஆலோசனை

பா.ஜ., ஓட்டுச் சாவடி முகவர்கள் ஆலோசனை

செஞ்சி: செஞ்சி தொகுதி பா.ஜ., ஓட்டுச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செஞ்சியில் நடந்த கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். இணை அமைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில செயலாளர் மீனாட்சி நித்யா சுந்தரம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ஓட்டுச் சாவடி முகவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் கவனம் செலுத்தி தகுதியானவர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஒன்றிய தலைவர்கள் பிரசன்னா, ஏழுமலை, அசோக்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஞானமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் ஓட்டுச் சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை